Skip to main content

நைஜிரியாவில் பள்ளிக் கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து!

நைஜிரியா

நைஜிரியாவில் பள்ளிக் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர். 100 க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''நைஜீரியாவின் வணிகத் தலைநகரமான லாகோஸ் நகரில் பள்ளிக் கட்டிடம் இன்று (வியாழக்கிழமை) (March 14) சரிந்து விழுந்ததில் 8 பேர் பலியாகினர். 100 க்கும் அதிகமான மாணவர்கள் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டனர்.

nigeria

மீட்கப்பட்டவர்களில் பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியில் ஈடுபட்டவர் இந்த விபத்து குறித்து கூறும்போது, ''விபத்து ஏற்பட்ட வழியாகச் சென்றபோது  கட்டிடம் சரிந்து விழுந்ததைக் கண்டேன். மீட்புப் பணியில் பலர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் பள்ளி மாணவர்கள். உள்ளூர் மக்கள் பல மாணவர்களைக் காப்பாற்றியுள்ளனர்'' என்றார்.

School Building collapsed in Nigeria.

nigeria

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.