Skip to main content

நாசிக் முதல் மும்பை வரை: விவசாயிகளின் இரண்டாம் கட்ட போராட்டம்!

kisan

கடந்த 12 மாதங்களில் இரண்டாவது முறையாக நாசிக் முதல் மும்பை வரையிலான 180 கி.மீ. வரையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அரசுடனான இரவு நேர பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் "கிசான் மார்ச் 2.௦" (Kisan March 2.0)என்ற தலைப்பில் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை தீர்ப்பதற்கு மகாராஷ்டிரா அரசாங்கத்துடன் பிப்ரவரி 20 ஆம் தேதி இரவு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாத நிலையில், அவர்கள் மும்பை நோக்கி 180 கிலோ மீட்டர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

"நேற்று இரவு நாங்கள் அமைச்சரவையில் கிரிஷ் மகாஜனுடன் ஒரு சந்திப்பு நடத்தினோம். அவர் எங்கள் கோரிக்கைகளை பற்றி நேர்மறையாக உறுதி அளித்தார். ஆனால் இந்த முறை, நாங்கள் வாய்மொழி உத்தரவாதங்களை கேட்க மாட்டோம் என்று அவர்களிடம் சொன்னோம். மகாராஷ்டிரா முதல்வரின் எழுத்துபூர்வ உத்தரவு எங்களுக்கு வேண்டும். அந்த நேரம் வரை நாங்கள் எங்கள் அணிவகுப்பு தொடரும்" என்று அகில இந்திய விவசாய சபாவின் தலைவர் அசோக் தவாலே தெரிவித்தார்.

"இந்த யாத்திரைக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை எனினும் நாங்கள் இந்த பயணத்தை துவங்கியுள்ளோம்" என்று அசோக் தவாலே தெரிவித்தார்.

மாநில காவல்துறையினர் விவசாயிகளின் வாகனங்களை பயணிக்க அனுமதி அளித்த பின்னர் செவ்வாயன்று நாசிக் பகுதியை விவசாயிகள் அடைந்தனர்.

பல்வேறு இடங்களில் விவசாயிகளின் வாகனங்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது

வரவிருக்கும் மக்களவை தேர்தலில் வெளிப்படையாக செய்யப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது என்று மாநில அரசு கூறியுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவது போன்ற கோரிக்கைகளின் நிலைப்பாட்டைப் பற்றி மஹாஜனிடம் கேட்டபோது அவர் அரசாங்கம் அவற்றை நிறைவேற்றுவதற்கு ஏற்கெனவே உறுதியளித்திருப்பதாக கூறினார்.

இருப்பினும், அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ரூபாய் 34,000 கோடி கடன் தள்ளுபடி திட்டத்தில், 17 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டது என ஆர்வலர்கள் கூறுகின்றனர். உண்மையில், அவர்களுக்கு ஏற்ப, பணம் செலுத்தும் செயல் நிறுத்தப்பட்டது.

Thousands Begin Kisan March 2.0 from Nashik to Mumbai After Failed Late-Night Talks With Govt

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.