Skip to main content

முதன்முறையாக திரையில் தோன்றும் ஜுனியர் விஜய்சேதுபதி!

sindhubaath

"பண்ணையாரும் பத்மினியும்", "சேதுபதி" ஆகிய படங்களை அடுத்து இயக்குநர் அருண்குமார் - விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள படம் "சிந்துபாத்".

இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் தனது மகன் சூர்யாவையும் நடிகர் விஜய்சேதுபதி அறிமுகம் செய்துள்ளார்.

இருவரும் இந்தப் படத்தில் திருடர்களாக நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வாசன் மூவீஸ் மற்றும் கே புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரிக்கும் இந்தப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

sindhubaath

விஜய்கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். விஜய் சேதுபதியின் பிறந்தநாளன்று படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிமிடத்தில் இருந்தே படத்தின் டீசருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இங்க எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்னை வருவது சகஜம் தான் என்று விஜய் சேதுபதியின் வசனத்தில் தொடங்கி முடியும் டீசரில் விஜய்சேதுபதியின் மகன் சூர்யா ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருகிறார்.

9-ம் வகுப்பு படித்து வரும் சூர்யா மாநில அளவிலான குத்துச் சண்டை சாம்பியன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sindhubaadh teaser out: Vijay Sethupathi-SU Arun Kumar team up for high-octane action film

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.