Skip to main content

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் நடிகர் விஷால் சந்திப்பு!

நடிகர் விஷால்

தமிழ் திரைப்படங்களை வெளியாகும்போதே, இணையதளத்தில் லீக் செய்யும் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை ஒரே நாளில் அழித்துவிடலாம் என்றும் அதற்குரிய திட்டத்தையும் நடிகர் மற்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவை கௌரவப்படுத்தும் நோக்கில், "இளையராஜா 75" என்ற தலைப்பு கொண்ட நிகழ்ச்சி, சென்னையில் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்து கொடுத்தவர் விஷால்.

இளையராஜா விழா நடத்தப்படக் கூடாது என்று பல்வேறு தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதும், அனைத்துத் தடைகளையும் தாண்டி நிகழ்ச்சி சிறப்பான முறையில் நடந்து முடிந்தது. இதையடுத்து, நிகழ்ச்சிக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், இன்று தமிழக தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார் விஷால்.

vishal meets tamilnadu cm

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விஷால், "இளையராஜா விழாவுக்கு சிறப்பான பாதுகாப்பு கொடுத்த தமிழக முதல்வருக்கு நன்றி சொல்லவே இங்கு வந்தேன்.

தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க ஒரே நாள் போதும். தமிழக அரசு நினைத்தால் அவர்களை இன்றே அழித்துவிடலாம். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை நான் இன்று முதல்வரிடத்திலே கூறியுள்ளேன்' என்றார்.

Actor Vishal meets Chief Minister, seeks action against Tamilrockers

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.