Skip to main content

முன்ஜாமீன் கோரியுள்ள கமல்!

கமல் ஹாசன்

'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து' என்று பேசியதால் தம் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் ஹாசன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் விடுமுறை கால அமர்வு நிராகரித்துவிட்டதால், அவர் முன்ஜாமீன் கோரியுள்ளார்.

அரவக்குறிச்சி இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

​    ​kamalhassan

இந்த மனு இன்று மே 16 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்த போது, "சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து. அவரது பெயர் நாதுராம் கோட்சே. மகாத்மா காந்தியை படுகொலை செய்த இந்து பயங்கரவாதி” என்று பேசி உள்ளார்.

இதற்கு பாஜக கட்சியினரும், இந்து அமைப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

bjp

கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாயா மனு தாக்கல் செய்தார். 

தமிழகத்தில் கமல்ஹாசன் பேசியதற்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

Kamal Haasan Seeks Anticipatory Bail

கமல் ஹாசன்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.