Skip to main content

மும்பை மேம்பாலம் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்

மும்பை மேம்பாலம்

மும்பையின் மையப்பகுதியான சத்ரபதி சிவாஜி மகராஜா ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம், இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

மும்பையின் மையப்பகுதியான சத்ரபதி சிவாஜி மகராஜா ரயில் நிலையம் அருகே உள்ள நடை மேம்பாலம், இடிந்து விழுந்ததில் 6 பேர் உயிரிழந்தனர் 33 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 

ஏற்கனவே நடைமேடை பழுதடைந்திருந்த போதிலும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

mumbai

இந்நிலையில் நேற்று மாலை மிக பரபரப்பாக இயங்கும் நேரத்தில் இரவு சரியாக 7.30 மணி அளவில் இடிந்து விழுந்துள்ளது.

பரபரப்பாக இயங்கும் நேரம் என்பதால், அலுவலகம் முடிந்து சாலையில் இருசக்கர வாகனங்களில் வீடு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் மீது அந்த பாலத்தின் உடைந்த பகுதியானது சுமார் 35 அடி உயரத்தில் இருந்து விழுந்தது.

mumbai

1984 ஆண்டில் கட்டப்பட்டது:

இந்த நடைமேம்பாலம், 1984ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் 1-யை, பி.டி. லேன் அமைந்திருக்கும் பகுதியுடன் இணைக்கிறது.

பாலம் கட்டப்பட்டு 35 ஆண்டுகளாகி பழுதான நிலையில் அதனை சரிப்படுத்தாமல் ரயில்வே நிர்வாகம் காட்டிய அலட்சியம் தான் விபத்துக்கு காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

On Mumbai Bridge Collapse, 6 killed and 33 injured

mumbai bridge collapse
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.