Skip to main content

மூளையின் ஜிபிஎஸ்ஸை மாற்றியமைக்க உதவும் கணக்கீட்டு ஆய்வுகள்

மூளையின் ஜிபிஎஸ்ஸை மாற்றியமைக்க உதவும் கணக்கீட்டு ஆய்வுகள்

கணினி உருவகப்படுத்துதலில் மெய்நிகர் விலங்குகளின் இயக்கத்தை ஆய்வு செய்வதன் மூலம், ஐஐடி மெட்ராஸில் உள்ள ஸ்ரீனிவாச சக்ரவர்த்தி தலைமையிலான ஆய்வுக் குழு, எலியின்  இரண்டு பரிமாணங்களிலும், வெளவால்களின் வழிநடத்துதலை (3D) எனப்படும் மூன்று பரிமாணங்களிலும் இருப்பதை கண்டுபிடித்துள்ளது.

இந்த தொழில்நுட்பம் கொண்டு தன்னாட்சி வாகனங்கள் மற்றும் டிரான்களை இயக்க உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளன.

எலி மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் பாராஹிப்போகாம்பஸ் பகுதிகளில் இருக்கும் "ஸ்பாஷியல் செல்கள்" எனப்படும் இடஞ்சார்ந்த செல்களை கொண்டிருக்கின்றன, இது அந்த எலியின் புலனுணர்வு வரைபடத்தை எலியின் மூளையில் உருவாக்க உதவும் "

ஒரு மூளையில் புலனுணர்வு அமைப்பைக் கொண்ட செல்கள் கண்டுபிடித்ததற்காக, உடற்கூறியல் மற்றும் மருத்துவத்திற்கான 2014 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டது, மூளையின் உள்ள ஜி.பி.எஸ் அல்லது நியூரான்கள் பயணத்தின் நிலை, தூரம் மற்றும் திசையை ஒருங்கிணைப்பதில் உதவுகின்றன.

கணித மாதிரிகள் மற்றும் கணினி உருவகப்படுத்துதல்களைப் பயன்படுத்தி, இந்த பல்வேறு பரவலான கலங்கள் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்தபோது, ​​எலிகள் தங்களது உணவை நோக்கி செல்லும் பிரமைக்கு வண்ணம் தீட்டி அதன் சிந்தனையை வெளி கொண்டு வந்தனர்.

மூளையின் ஜிபிஎஸ்ஸை மாற்றியமைக்க உதவும் கணக்கீட்டு ஆய்வுகள்

'பிளாஸ் செல்கள்' என்று அழைக்கப்படும் செல்கள் ஒரு அறையில் எலி இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்போது செயல் பட துவங்குகிறது, 'கிரிட் செல்கள்' என்று அழைக்கப்படும் மற்றொரு வகை செல்கள், இந்த அமைப்பை ஒருங்கிணைத்து, நிலைபெற செய்து, அந்த பாதையில் செல்ல உதவுகிறது.

"மூன்று பரிமாணத்தில் பறக்கும் சூழ்நிலையில் ஒரு வெளவால் மூளையில் இருந்து தகவல் பெறும் நரம்பியல் ஜி.பி.எஸ் அமைப்பை உருவகப்படுத்திய ஒரு உயர்தரமான நரம்பியல் பிணையத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். முப்பரிமாண நெட்வொர்க் பிளாஸ் செல்களை உருவாக்கியது மட்டுமல்லாமல், முப்பரிமாண பாதைக்கு தேவையானதும், இன்னும் கண்டுபிடிக்கப்படாத வகை ஸ்பாஷியல் செல்களுக்கும் தகவல் பெறும் நரம்பியல் ஜி.பி.எஸ் அமைப்பை உருவகப்படுத்த முடியும்" என ஐ.ஐ.டி. சென்னையின், பயோடெக்னாலஜி துறை கார்த்திக் சோமன் கூறியுள்ளார்.

மூளையில் உள்ள இடஞ்சார்ந்த புலனுணர்வு முறை குறித்த புரிந்துணர்வு பிற வாகனங்கள், டிரான்ஸ் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் பயண பாதையை உருவாக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

Computational studies help decode brain’s GPS

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.