Skip to main content

மதுரை அரசு மருத்துவமனையில் 3 பேர் மரணம் குறித்து ‍டீன் வனிதா விளக்கம்!

மதுரை அரசு மருத்துவமனை

மே 7 ஆம் தேதி மாலை மதுரையில் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்தது.  இதனால் மதுரை நகரில் மின்தடை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் ஐசியூவில் இருந்த 5 பேர் மின்தடையால் உயிரிழந்தனர் என குற்றச்சாட்டு கூறப்பட்டது.

இதனால் அவர்களின் உறவினர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுடன் முதன்மை வருவாய் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உடனடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், டீன் வனிதா செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டது.  ஆனால் இரண்டு ஜெனரேட்டர்களும் பழுதடைந்து ஓடவில்லை.  இதனால் அவற்றில் இருந்து மின்சாரம் பெறமுடியவில்லை.

எனினும், அவசரகால பேட்டரிகள் உதவியுடன் வென்டிலேட்டர்கள் இயக்கப்பட்டன என கூறினார். மின்தடையால் அவர்கள் உயிரிழந்தனர் என கூறுவது தவறு.  ஐசியூவில் மரணம் அடைந்த 3 பேரில் 2 பேர் மாரடைப்பினாலும் மற்றும் ஒருவர் நோய் தீவிரமடைந்தும் உயிரிழந்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.

3 Patients die at Madurai Government Hospital due to power Failure, Doctor Deny Reports.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.