Skip to main content

மத்திய அரசின் ராஷ்ட்ரிய கோகுல் திட்டம்!

Rashtriya Gokul Mission

நோக்கம்: நன்கு கவனம் செலுத்தப்பட்ட மற்றும் அறிவியல் பூர்வ முறையில் உள்நாட்டு கால்நடை இனங்களின் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு.

குறிக்கோள்:

உள்நாட்டு கால்நடை இனங்களின் மரபியற் கட்டமைப்பினை, அதிகரிக்க உள்நாட்டு கால்நடைகளை பாதுகாத்தல் மற்றும் அவற்றினை மேம்படுத்துதல்.

பால் உற்பத்தித் திறனை மேம்படுத்துதல்.

இயற்கை சேவைகளுக்காக நோய்களில்லா உயர் மரபியற் பண்புடைய காளைகளை விவசாயிகளுக்கு வழங்குதல்.

அமல்படுத்தும் அமைப்பு: கால்நடைகள் அபிவிருத்தி வாரியத்தின் மூலம் சம்பந்தப்பட்ட மாநில அமல்பாட்டு நிறுவனங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.

நிதியளிப்பு: 100 சதவீதம் மானியம் அடிப்படையிலான நிதியளிப்பு உடையது இத்திட்டம்.

இத்திட்டத்தின் கீழுள்ள துவக்கங்கள்:

ஒருங்கிணைந்த உள்நாட்டு கால்நடை மையங்கள் நிறுவுதல் - கோகுல் கிராம்.

உள்நாட்டு கால்நடைகளை வளர்ப்பவர்களின் சங்கத்தை நிறுவுதல் - கோபாலன் சங்.

உழவர்களுக்கு "கோபால் ரத்னா" விருதினை வழங்குதல், கால்நடை வளர்ப்பவர்களின் சங்கத்திற்கு "காமதேனு " விருதினை வழங்குதல்.

சிறந்த மூலவுயிர் திசுக்கள் தொகுதியின் களஞ்சியமாக உள்ள நிறுவனங்களுக்கு உதவுதல்.

Rashtriya Gokul Mission: Department of Animal Husbandry and Dairying

Tamil