Skip to main content

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு துவங்கியது!

medical admissions in tamilnadu

தமிழகத்தில் மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியது. மாணவர்கள்  http://www.tnhealth.org/ அல்லது http://www.tnmedicalselection.org/ மூலம் விண்ணப்பிக்கலாம். 

நாடு முழுவதும் 14 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5 ஆம் தேதி வெளியானது. தமிழகத்தில் 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சிப் பெற்று மருத்துவப் படிப்பில் சேருவதற்கு தகுதிப் பெற்றுள்ளனர்.

இந்த நிலையில், இந்தாண்டு மருத்துவப்படிப்பில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு இன்று ஜூன் 7 ஆம் தேதி தொடங்கியுள்ளது.

medical admison

1. விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூன் 20 ஆம் தேதி வரையில் ஆன்லைனில் கிடைக்கும். மாணவர்கள் தங்களது சுயவிபரங்கள், கல்வித்தகுதி உள்ளிட்டவற்றை ஆன்லைனில் பூர்த்தி செய்ய வேண்டும். 

2. பின்பு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, 

HE SECRETARY,

SELECTION COMMITTEE,

162, PERIYAR E.V.R.

HIGH ROAD,

KILPAUK,

CHENNAI – 10  

- என்ற முகவரிக்கு வரும் 21ம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். 

medical admission

எம்.பி.பி.எஸ் (மருத்துவம்) படிப்பிற்கான ஒரு வருட கல்விக்கட்டணம் 13,610 ரூபாய் என்றும், பி.டி.எஸ் (பல் மருத்துவம் ) படிப்பிற்கான ஒரு வருட கல்விக்கட்டணம் 11,610 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பிரிவினருக்கு கல்விக்கட்டணத்தில் சலுகைகள் உண்டு.

ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த முழுமையான விபரங்களும் http://www.tnhealth.org/ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதற்காக பிரத்யேகமாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விபரங்களுக்கு பின்வரும் குறிப்பேட்டை படிக்கவும்:

http://tnmedicalonlinedoc.site/PDFFILE/GOVTQUOTA2019.pdf

ONLINE REGISTRATION FOR ADMISSION TO MBBS / BDS DEGREE COURSES IN TAMILNADU BEGINS FROM JUNE 7.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.