Skip to main content

மறைந்தார் தமிழகத்தின் தொலைநோக்கு விவசாயி - நெல் ஜெயராமன்

மறைந்தார் தமிழகத்தின் தொலைநோக்கு விவசாயி - நெல் ஜெயராமன்

தமிழகத்தின் நம் பாரம்பரிய 169 நெல் ரகங்களை மீட்டெடுத்து பெருஞ்சாதனை செய்தவரும் ஐயா கோ.நம்மாழ்வார் அவர்களின் சீடராக இயற்கை வேளாண்மையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்க பெரும் உழைப்பை கொடுத்தவருமான திரு நெல்.ஜெயராமன் அவர்களின் மறைவு தமிழர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்தாருக்கும் ஒரு மாபெரும் இழப்பாகும்.

54 வயதான நெல் ஜெயராமன், கடந்த இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்தநிலையில் இன்று டிசம்பர் 6 ஆம் தேதி சென்னையில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதோடு அவர் மறைவால் வாடும் குடும்பத்தாருக்கும் விவசாயிகளுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.

மாண்டது வெறும் உயிரல்ல இந்த உலகமே அபகரிக்க துடிக்கும் நம் மண்ணின் வளத்தை விவசாயத்தை தினம் தினம் பாதுகாத்த ஒரு விவசாயி.

தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் ஆதிரங்கம் கிராமத்திலிருந்து வந்த நெல் ஜெயராமன், தனது இளம் வயது முதலே நெல்லின் சொந்த இனங்களை பயிரிட்டு, பாதுகாத்து வளர்ப்பதில் அக்கறை காட்டியவர்.

ஆனால் ஜெயராமன் ஒரு ஏழ்மையான விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர், அவரால் தனது உயர்நிலை கல்வியை கூட முடிக்க முடியவில்லை, அதற்குப் பதிலாக அவரது பண்ணையில் வேலை செய்யத் தொடங்கினார்.

பின்னர் அவர் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி (FEDCOT) கூட்டமைப்பு விவசாய இயக்குனராக இணைந்தார். 

மறைந்தார் தமிழகத்தின் தொலைநோக்கு விவசாயி - நெல் ஜெயராமன்

நுகர்வோர் ஆராய்ச்சி, கல்வி, செயல், பயிற்சி மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றின் நிர்வாக அறங்காவலரான பொன்மம்பலத்தின் நட்பைப் பெற்றார்.

2004 ஆம் ஆண்டில் அவர் 300 விவசாயிகளுக்கு 2 கிலோ பாரம்பரிய நெல் விநியோகிகம் செய்துள்ளார், இதனால் கரிம வேளாண்மையில் ஒரு வல்லமைமிக்க இயக்கம் தொடங்கியது.

2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில், ஜெயராமன் சிறு கூட்டங்களை ஏற்பாடு செய்தார், அதில் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட இயற்கை வளமாகிய நெல் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார்.

பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 169 பாரம்பரிய நெல் வகைகளை சேகரித்தவராவார். மரபணு மாற்று விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார். 

பாரம்பரிய நெல் வகைகளை காப்போம்...உலகில், உணவின் அடையாளம் நெல்.. அந்த பாரம்பரிய நெல்லின் அடையாளம் ஐயா 'நெல் ஜெயராமன்'..

தமிழ் மக்கள் இழந்த 4000 த்திற்கும் மேற்பட்ட நெல் ரகங்களில், 150 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து உழவர்களுக்கு இலவசமாக விதை நெல் வழங்கி, நாம் இழந்த்தை மீண்டும் நம் தமிழ் மண்ணுக்கு வழங்கினார் நமது ஐயா 'நெல் ஜெயராமன்.

Remembering Nel Jayaraman-Tamil Nadu's Visionary agriculturalist.

மறைந்தார் தமிழகத்தின் தொலைநோக்கு விவசாயி - நெல் ஜெயராமன்

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.