Skip to main content

மறைந்த அருண் ஜெட்லியின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆறுதல்!

narendra modi

மறைந்த பாஜக தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜெட்லியின் இல்லத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆகஸ்ட் 27 ஆம் தேதி வருகை தந்தார். அங்கு மறைந்த முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தினார்.

கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி அருண் ஜெட்லி இயற்கை எய்தினார். அந்த சமயத்தில் பிரதமர் மோடி பிரான்ஸ்-ஐக்கிய அரபு அமீரகம்-பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகளில் சுற்றுபயணத்தில் இருந்த காரணத்தினால், அருண் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் பிரதமர் கலந்து கொள்ள முடியவில்லை.

எவ்வாறாயினும், அவரது மறைவு செய்தியைத் தொடர்ந்து ஜெட்லியின் குடும்பத்தினருடன் அலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய அவர் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

arun jaitley

அருண் ஜெட்லி புது தில்லியில் ஆகஸ்ட் 24 அன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 66.

மாநிலங்களவையில் நான்கு முறை உறுப்பினராக இருந்த இவர், 2000 ல் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் அரசாங்கத்தில் அமைச்சரானார். 2009 ஜூன் முதல் 2014 வரை மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியின் முதல் பதவிக்காலத்தில் அருண் ஜெட்லி நிதி மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சராக இருந்தார், மேலும் பாதுகாப்பு மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு இலாகாக்களையும் வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PM Modi visits Arun Jaitley's residence, pays tribute to late BJP leader

Tamil