Skip to main content

மோடி கோரிக்கையை ஏற்ற சவுதி இளவரசர் - 850 இந்திய கைதிகள் விடுதலை!

மோடி கோரிக்கையை ஏற்ற சவுதி இளவரசர்

சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மானின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்படி, பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க 850 இந்திய கைதிகளை விடுதலை செய்ய முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது

ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த, சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் இந்திய பிரதமர் மோடி இன்று (February 20) முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். ஒரு நாள் பயணமாக இந்தியா வந்த சல்மானுக்கு டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சவுதி அரேபியர்களுக்கு ஈ-விசா வசதிகளை விரிவாக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்திய பிரதமர் மிகவும் வரவேற்ற சூரிய சக்தி வளர்ச்சியில், சவுதி அரேபியா சர்வதேச சூரிய ஒத்துழைப்புடன் இணைந்தது, என மத்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு நாடுகளும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஒத்துழைப்பு அளித்தனர், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிலும் ஒத்துழைப்பு அளிப்பதாக, பேச்சுவார்த்தைகளின் பின்னர் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, சவுதி அரேபியா ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை மூடுவதன் காரணமாக தற்போது சவுதியில் சிக்கியிருக்கும் இந்தியத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினையை தீர்க்க ஒப்புக் கொண்டுள்ளது என மத்திய விவகாரத்துறையின் பொருளாதாரச் செயலாளர் டி.எஸ். திருமூர்த்தி கூறினார்.

இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்தும் முயற்சிகளில், எதிர்காலத்தில் கூட்டு கடற்படை பயிற்சிகளை நடத்த எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில், சவுதி அரேபியா இந்தியாவை 8 வது மூலோபாய பங்காளியாகக் கொண்டுள்ளது. 2017-18 நிதியாண்டில் சவுதி மற்றும் இந்தியாவிற்கு இடையேயான இருதரப்பு வர்த்தகம் 27.48 பில்லியன் டாலராக இருந்தது.

Crown Prince orders release of 850 Indian prisoners from Saudi jails on PM Modi's request

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.