Skip to main content

மங்களூருவின் இரண்டு கிணறுகளில் பெட்ரோல் வைப்பு கண்டுபிடிப்பு !!!

இந்திய எண்ணெய் கூட்டு நிறுவனம்

இன்று நவம்பர் 8 கர்நாடக மாநிலம் மங்களூருவில் தேரலகட்டே கிராமத்தில் அமைந்திருக்கும் கே.எஸ்.ஹெக்டே மருத்துவ அகாடமி அருகே ஒரு குடியிருப்புப் பகுதியில் இரண்டு கிணறுகளில் பெட்ரோல் இருப்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை நவம்பர் 7 மாலை குடியிருப்புகளில் தங்கியிருப்போர் இரண்டு கிணறுகளில் பெட்ரோல் வைப்பு இருப்பதாகக் கூறி தீயணைப்பு மற்றும் அவசர சேவை நிலையத்தை தொடர்பு கொண்டு அழைத்தனர். இந்த இரண்டு திறந்த கிணறுகளும் இந்திய எண்ணெய் கூட்டு நிறுவனத்திற்கு சொந்தமானவை. பெட்ரோல் நிலையத்தின் சேமிப்பு வசதிகளிலிருந்தும் பெட்ரோல் வெளியேறலாம் என்று குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியதாக மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஜி.தீப்பஸ்வாமி கூறினார்.
 
தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் குழுவுடன் தீப்பஸ்வாமி இன்று நவம்பர் 8 அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்றதாக தெரிவித்தார். 30 அடி ஆழத்தில் இருக்கும் கிணறுகளில் பெட்ரோல் வைப்பு காணப்பட்டது. பெட்ரோல் இருப்பு மிகவும் ஆழமாக உள்ளது என்றும், அதை வடிகட்டும் வசதி தங்களுக்கு இல்லை எனவும் கூறினார். இதன் காரணமாக, இந்திய எண்ணெய் கூட்டு நிறுவன பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
 
இரண்டு கிணறுகளில் பெட்ரோல் வைப்புக்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக ஒரு குழுவினர் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக இந்திய எண்ணெய் கூட்டு நிறுவன அதிகாரி கூறினார்.

Petrol deposit found on two wells in Deralakatte village of Karnataka.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.