Skip to main content

மம்தாவிடம் மன்னிப்பு கேட்க முடியாது ‍- ஜாமினில் வந்த பிரியங்கா சர்மா திட்டவட்டம்!

பிரியங்கா சர்மா

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாஜக இளைஞரணியான யுவ மோர்ச்சாவை சேர்ந்த ஹவுரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரியங்கா சர்மா என்ற பெண்ணை தாஸ்நகர் காவல்துறையினர் கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 14 நாள் நீதிமன்ற காவலில் அடைத்து வைக்கப்பட்டார்.

இதற்கிடையே, பிரியங்கா சர்மாவை ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் என்.கே.கவுல் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மேலும், விடுதலையானவுடன் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா

மன்னிப்பு கேட்க முடியாது!

இந்நிலையில் இன்று மே 15 ஆம் தேதி பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரியங்கா, "நான் மம்தா புகைப்படத்தை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன். சிறையில் இருந்தபோது காவல்துறையினர் என்னை கொடுமைப்படுத்தினர். சிறை காவலாளி நேற்று என்னை தள்ளிவிட்டார்.  

நான் குற்றவாளி அல்ல, என்னை இவ்வாறு நடத்துவது முறை அல்ல என அவரிடம் கூறினேன். இருப்பினும் என்னை சரியாக நடத்தவில்லை. சிறைக்குள் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நான் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானேன்’ என கூறினார்.  

"Tortured In Jail" and "So I won't Apologise" Alleges BJP Activist Who Shared Mamata Banerjee Meme

 

MAMTA BANERJEE
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.