Skip to main content

மம்தா பானர்ஜியின் முகத்தை மார்ப் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்!

பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் முகத்தை மெட்காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்துவந்த உடையுடன் இணைத்து, அவதூறு கிளப்பும் வகையில் மீம்ஸ் வெளியிட்ட பாஜக இளைஞர் அணியைச் சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்காள அரசியலில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா சர்மா

இந்திரா பானர்ஜீ மற்றும் சஞ்சீவ் கண்ண ஆகியோர் கொண்ட கோடைகால அமர்வு இந்த மனுவை விசாரித்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பிரியங்கா சர்மாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

மேலும், விடுதலையானவுடன் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MAMTA BANERJEE

 

கடந்த 10 ஆம் தேதி மேற்கு வங்க காவல்துறையினரால் பிரியங்கா ஷர்மா கைது செய்யப்பட்டு, இரண்டு வார சிறைச்சாலை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு இன்று மே 14 ஆம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது

Mamata morphed image: SC grants bail to BJP activist

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.