Skip to main content

மழை காரணமாக இந்தியா - நியூசிலாந்து லீக் ஆட்டம் ரத்து!

இந்தியா - நியூசிலாந்து உலகக்கோப்பை ஆட்டம் ரத்து!

இந்தியா - நியூசிலாந்து இடையிலான உலகக்கோப்பை லீக் ஆட்டம் நாட்டிங்காமில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நாட்டிங்காமில் கடும் மழை பெய்து வந்தது. இதனால் போட்டி நடக்குமா? என்ற சந்தேகம் எழும்பியது.

போட்டிக்கான டாஸ் சரியாக 2.30 சுண்டப்படும். அப்போது மழை பெய்யவில்லை. ஆனால் மேகம் கருமையாக திரண்டு இருந்தது. இதனால் அரைமணி நேரம் கழித்து, சூழ்நிலையை பார்த்து டாஸ் சுண்டப்படும் என தெரிவிக்கப்பட்டது.

nottingham

இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி: 

அவ்வாறு அறிவித்த மறுநிமிடத்தில் இருந்து கனமழை பெய்யத் தொடங்கியது. இந்திய நேரப்படி போட்டி தொடங்கும் மதியம் 3 மணியில் இருந்து இரவு 7.40 மணி வரை மழை ஓயவில்லை.

இதனால் போட்டி கைவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகவே, நியூசிலாந்து மற்றும் இந்தியாவுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன.

India vs New Zealand World Cup Game Called Off Due to Rain

india vs newzealand
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.