Skip to main content

மக்களவைத் தேர்தல் 2019: 48 மணி நேரங்களுக்கு மதுபானக்கடைகளை மூட உத்தரவு 

48 மணி நேரங்களுக்கு மதுபானக்கடைகள் மூட உத்தரவு 

நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு முடியும் வரை, 48 மணி நேரங்களுக்கு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும்.

அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் முதலான தொகுதிகளை தவிர்த்து மற்ற 18 சட்டமன்ற தொகுதிக்கும் அன்றைய தினம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தொடர்ந்து, மதுபாட்டில்கள், இலவச பரிசுப்பொருட்கள், ரொக்கப்பணம் ஆகியவை வழங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதில் தமிழகத்தில் அதிக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் தேர்தல் பறக்கும் படையினர் அறிவித்துள்ளனர்.

48 மணி நேரங்களுக்கு மதுபானக்கடைகள் மூட உத்தரவு 

இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், வாக்குப்பதிவு முடியும் வரை, 48 மணி நேரங்களுக்கு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டும்.

48 மணி நேரங்களுக்கு மதுபானக்கடைகள் மூட உத்தரவு 

அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என கூறியிருந்தது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையம் வேண்டுகோள்

இதைத்தொடர்ந்து, வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, எடுத்து செல்லவோ கூடாது என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம், இந்தியாவில் வெளிநாட்டு மதுபானம், பீர் மற்றும் ஒயின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபானக்கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23 ஆம் தேதியும் மூடப்படும் என்று தமிழ்நாடு மாநில நுகர்பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.

LokSabha Elections 2019: Tasmac's are ordered to closed for 4 days.

tasmac is to shut down on APRIL 16,17, 18

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.