Skip to main content

மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் - பெங்களூரு மத்திய தொகுதியில் தனித்து போட்டி!

மக்களவை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பிரகாஷ் ராஜ் - பெங்களூரு மத்திய தொகுதியில் தனித்து போட்டி!

நடிகர் பிரகாஷ்ராஜ், வருகின்ற 2019 ஆம் ஆண்டின் நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அண்மையில் அறிவித்தார். அதன்படி, வரும் மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார்.

கமல்ஹாசன் வாழ்த்து

இந்நிலையில் நண்பர் பிரகாஷ்ராஜின் அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்கள் என்று நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, எனது நண்பர் பிரகாஷ் ராஜூக்கு அவரது அரசியல் பயணத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். தான் கூறியதை செயல்படுத்தியதற்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மியும் பிரகாஷ்ராஜூக்கு தனது ஆதரவை தெரிவித்து, நல்ல மனிதர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது.

தனித்து போட்டி 

இந்தநிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடவுள்ளதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பிரகாஷ்ராஜ் ட்விட்டர் பதிவில், என்னுடைய புதிய பயணத்துக்கு, என்னை உத்வேகப்படுத்தும் வகையில் வரவேற்பளித்ததற்கு நன்றி.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெங்களூரு மத்தியத் தொகுதியில் போட்டியிடவுள்ளேன். இதுகுறித்து விரைவில் ஊடகங்கள் முன்னிலையில் முழு விவரங்களை தெரிவிப்பேன் என்றார்.

Actor Prakash Raj to contribute from Bengaluru Central as independent candidate.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.