Skip to main content

மக்களவை தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் கட்சிக்கு ஆதரவாக கமல் அந்தமானில் பிரச்சாரம் !

KAMAL AND MAMTA BANERJEE

மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நேற்று சந்தித்து பேசினார். கொல்கத்தாவில் இந்த சந்திப்பு நடந்தது.

இந்த சந்திப்பின் முடிவில் மக்களவை தேர்தலில் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக  கமல்ஹாசன் அந்தமானில் பிரச்சாரம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக மேற்கு வங்க முதல்வர் மம்தாவிடம் இருந்து ஆசி பெறவே இந்த சந்திப்பு என கமல் தெரிவித்தார்.

KAMAL

தமிழகத்தில் தனித்து போட்டி 

மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. முதல்கட்டமாக 21 வேட்பாளர்களின் பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 24 ஆம் தேதி மீதம் உள்ளவர்களின் பெயரும், தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டது. 

கமல் சந்திப்பு குறித்து மம்தா பானர்ஜி பேட்டி 

மக்கள் நீதி மய்யத்துடன் நாங்கள் அந்தமானில் கூட்டணி அமைத்துள்ளோம். அங்கு மனோரஞ்சன் பக்தாவின் பேரன் அயான் மோண்டல் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

KAMAL

ஏப்ரல் 6-ம்தேதி அந்தமானுக்கு செல்லும் கமல்ஹாசன், எங்களது வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரிப்பார். அன்றைய தினம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல் பேசுகிறார். 

இது மேற்கு வங்க மக்களும், தமிழ்நாட்டை சேர்ந்தவர்களும் இணைந்து பணியாற்ற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 

இவ்வாறு மம்தா கூறினார். 

Trinamool Congress alliance with Kamal Haasans's party for Lok Sabha polls

kamal meets mamata banerjee
Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.