Skip to main content

மக்களவை தேர்தல் முடிவுகள்: தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அவசர சந்திப்பு!

 தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!

வரும் மே 23 ஆம் தேதி வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும் ஆலோசனை நடத்த தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இன்று மே 21 ஆம் தேதி விருந்து ஒன்றில் கலந்துகொள்கின்றனர்.

தேசிய தலைநகர் புது டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தலைமையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

இந்த சந்திப்பில் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!

பீகார் முதலமைச்சர் மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி தலைவர் நிதீஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் லோக் ஜன்சக்தி கட்சி தலைவரான ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரவு விருந்துக்கு முன்னதாக பாஜக கட்சி தலைமையகத்தில் பாஜக தலைவர்கள் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு சாதகமாக அமைந்துள்ள நிலையில் இந்த இரண்டு கூட்டங்களும் நடைபெறுகின்றன.

NDA leaders to meet today to chalk out strategy on outcome of general elections

 தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் சந்திப்பு!

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.