Skip to main content

மக்களவை தேர்தல் முடிவு: தாமதம் ஏற்பட வாய்ப்பு ‍!

vvpat machine

VVPAT என்றால் என்ன?

VVPAT எனப்படும் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரங்கள் வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கே தங்களது வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்க உதவுகிறது.

"VVPAT இணைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குப்பதிவு முறை துல்லியமாக செயல்பட உதவுகிறது. வாக்குப்பதிவில் வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளர்களின் நம்பிக்கையை பெற VVPAT இயந்திரங்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட வேண்டும்." என உச்சநீதிமன்றம் தெரிவித்தது

இதன் முடிவில் மக்களவை தேர்தலின்போது தொகுதி ஒன்றுக்கு ஒரேயொரு விவிபாட் எந்திரத்தில் (VVPAT or voter-verified paper audit trail ) பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு பதிலாக சட்டமன்றம் வாரியாக ஒவ்வொரு விவிபாட் எந்திரங்களை சரிபார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

vvpat machine

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.

இதுதொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு அவை மொத்தமாக உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23-ம் தேதியன்று விவிபாட் எந்திரங்கள் எண்ணப்படவுள்ளன. இதற்கு இந்திய துணை தேர்தல் ஆணையர் சுதீப் ஜெய்ன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

vvpat machine

ஒரு விவிபாட் எந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்ப்பதற்கு சராசரியாக ஒரு மணிநேரம் தேவைப்படும்.

தற்போது 4 விவிபாட் எந்திரங்களை சரிபார்க்க வேண்டியுள்ளது. இதற்கு கூடுதலாக 4 மணி நேரம் ஆகும். எனவே மக்களவை தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி மாலை அல்லது மே 24 காலையில் தான் தெரியவரும்.

வாக்குப்பதிவு மற்றும் விவிபாட் எந்திரங்களில் முறைகேடு ஏதும் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Lok Sabha Election Results Likely To Be Delayed. Reason - VVPATs

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.