Skip to main content

மக்களவை தேர்தல் காரணமாக ஒரு நாள் கழித்து வெளியாகும் "காஞ்சனா 3"

 "காஞ்சனா 3"

நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த படம் “முனி”. அப்பட வெற்றியின் தொடர்ச்சியாக கதை கருவை வைத்துக்கொண்டு வெவ்வேறு கோணங்களில் “காஞ்சனா”, “காஞ்சனா 2” என இரண்டு படங்களை இயக்கியுள்ளார் லாரன்ஸ். அந்த வரிசையில் தற்போது காஞ்சனா 3 படம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாக உள்ளது. முன்னதாக ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறுவதால், படம் ஒரு நாள் கழித்து ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகிறது.

ராகவா லாரன்ஸின் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் "முனி". இதன் இரண்டாம் பாகம் "காஞ்சனா" என்ற பெயரில் வெளிவந்தது.

தொடர்ந்து டாப்ஸி, நித்யா மேனன் நடிப்பில் "காஞ்சனா-2" திரைப்படமும் வெளியானது. இதன் அனைத்துப் பாகங்களிலும் ஹீரோவாக லாரன்ஸே நடித்திருந்தார். வெளிவந்த இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலைக் குவித்தன.

தற்போது இந்தப் படத்தின் 3-ம் பாகம் உருவாகியுள்ளது. ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து வரும் இந்தப் படத்தை ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லாரன்ஸே தயாரித்துள்ளார்.

 "காஞ்சனா 3"

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஓவியா மற்றும் வேதிகா நடித்துள்ளனர்.

மேலும் கோவை சரளா, தேவதர்ஷினி, ஸ்ரீமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காஞ்சனா 3 படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டரை பொங்கல் தினத்தன்று சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது.

தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படம் ஏப்ரல் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் "காஞ்சனா" படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளார் ராகவா லாரன்ஸ். அதில் ஹீரோவாக அக்‌ஷய் குமாரும் ஹீரோயினாக கியாரா அத்வானியும் நடிக்க உள்ளனர்.

Kanchana 3 locks release date!

 "காஞ்சனா 3"

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.