Skip to main content

மக்களவை தேர்தல் 2019: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

#BJPElectionManifesto2019

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி மே 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. 

முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

#bjpManifesto2019

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

உறுதிமொழி பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பாஜக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் பற்றிய தகவல்களுடன், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

#bjpManifesto2019

நடைமுறையில் சாத்தியமாகும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்திருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். 

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும்  மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார்.

மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் எவ்வித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார். 

BJP Released Its Election Manifesto for Lok Sabha Polls 2019. 

#BJPmanifesto

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.