Skip to main content

மக்கள் நீதி மய்யம் கட்சியின் மக்களவை தேர்தல் அறிக்கை - சிறப்பம்சங்கள்!!!

makkal needhi mayyam election manifesto

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறது.

தமிழக நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் அந்த கட்சி போட்டியிடுகின்றது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று மார்ச் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில், மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.

kamal hassan

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கைன் முக்கிய அம்சங்கள்:

5 வருட ஆட்சி காலத்திற்குள் 50 லட்சம் வேலைவாய்ப்பு.

அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஓதுக்கீடு.

விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க திட்டங்கள்.

ரேஷன் பொருட்கள் வீட்டில் வழங்கப்படும். 

டோல் கட்டணம் முற்றிலும் ஒழிக்கப்படும்.

கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், சவுக்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என மோடியை கடுமையாக விமர்சித்தார்.

இந்த கூட்டத்திற்கு முறையான அனுமதி வழங்கப்படவில்லை என தேர்தல் பறக்கும் படையினர் கூட்டத்தை பாதியில் நிறுத்தினர். 

தேர்தல் ஆணையம் சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Makkal Needhi Mayyam Loksabha Election Manifesto

kamal hassan

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.