Skip to main content

மக்கள் நீதி மய்யம் சார்பில் சிவகங்கை தொகுதியில் கவிஞர் சினேகன் போட்டி!

snehan to contest in sivagangai assembly.

2019 நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இதில், நடிகர் கமல்ஹாசன் தொடங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி முதல் முறையாக தேர்தல் களத்தை சந்திக்கிறது.

முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே வெளியிட்டு இருந்த நிலையில், நேற்று மார்ச் 24 ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில், மக்கள் நீதி மய்யத்தினர் நடத்திய பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் இரண்டாம் கட்ட வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யத்தின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டார்.

kamal hassan

மக்களவை தேர்தலில் கமல்ஹாசனும் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று அறிவித்தார். கவிஞர் சினேகன் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், சவுக்கிதார் எனத் தன்னை சொல்லிக்கொள்ளும் பிரதமர் மோடி ஏழைகளின் காவலர் அல்ல. பணக்காரர்களின் காவலர் என மோடியை கடுமையாக விமர்சித்தார்.

Makkal Needhi Mayyam Chief KamalHassan not to contest in upcoming Loksabha polls.

makkal needhi mayyam

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.