Skip to main content

மிரட்டும் கஜா ‍-10 முக்கிய தகவல்கள்!!!

மிரட்டும் கஜா ‍-10 முக்கிய தகவல்கள்!!!

நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையே கஜா புயல், நள்ளிரவில் கரையை கடந்தது, அப்போது 120 கி.மீ. வேகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் காற்று வீசியது.

உதவி தேவைப்படும் நபர்களுக்கு அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளது 1070 (மாநில அளவில்) மற்றும் 1077 (மாவட்ட அளவில்).

10 முக்கிய தகவல்கள்:

1. நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் திருவாரூர் உட்பட ஆறு மாவட்டங்களில் இருந்து கரையோரத்தில் வசிக்கும் 76.290 பேர் பாதுகாப்பு கருதி, 300 க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. நாகப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிற கடலோர பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டது. நாகப்பட்டினத்தில் தேசிய அனர்த்த முகாமைத்துவப் படையினரின் நான்கு அணிகள் ஏற்கனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

3. கடலூர் மாவட்டத்தில் மாநில அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இரண்டு அணிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

4. "புயலின் மைய பகுதி கரையை கடந்து, தற்போது நிலத்தில் உள்ளது என்றும், ஆனால் அதன் பின்புறம் கடல் பகுதியிருப்பதாகவும், அது ஒரு மணி நேரத்திற்கு மேல் நிலத்தை கடக்கும்," என்று இந்திய வானிலை ஆய்வு மையம்  செய்தித்தாள் காலை 3.15 மணியளவில் செய்தி வெளியிட்டது.

5. கஜா புயல் மேற்கு நோக்கி நகரும், மேலும் அடுத்த சில மணி நேரங்களில் இந்த புயல் படிப்படியாக குறைந்து பலவீனமாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டது.

மிரட்டும் கஜா ‍-10 முக்கிய தகவல்கள்!!!

6. புயல் கரையை கடந்த போது, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூரில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.இதனால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

7. நவம்பர் 15 ஆம் தேதி, வியாழக்கிழமை மாலையில் இருந்தே கடுமையான மழை மற்றும் வலுவான காற்றழுத்தம் தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் தொடங்கியது.

8. தென்னிந்திய அரேபிய கடலில் உள்ள கேரள கடலோர பகுதியிலும், கொமோரின் பகுதியிலும், மன்னார் வளைகுடாவிலும், நவம்பர் 16 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை  மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என கேரள மீன்பிடித்துறை தொழிலாளர்கள் அறிவுறுத்தபட்டனர்.

9. சென்னையில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு செல்லும் 4 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களுக்கான நான்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் திசை திருப்பப்பட்டுள்ளது.

10. இந்திய கடற்படை முன் எச்சரிக்கையுடன் தயாராக வைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணி மற்றும் நிவாரண பொருட்களை வழங்குவதற்காக கடற்படை விமானம் தயார் நிலையில் உள்ளது. பாதிக்கப்பட்ட  பகுதிகளை கண்காணிக்க இரண்டு கடற்படை கப்பல்கள் - ரன்வீர் மற்றும் கான்ஜர் அப்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

Cyclone Gaja makes landfall in Tamil Nadu, 76,290 people evacuated | 10 points

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.