Skip to main content

மின்-இயக்க கார்களை தயாரிக்க 14 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் ஆடி நிறுவனம்!!!

மின்-இயக்க கார்களை தயாரிக்க 14 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் ஆடி நிறுவனம்!!!

மின்-இயக்க கார், டிஜிட்டல் கார் மற்றும் தான் இயக்கி கார் போன்ற புதிய தொழில்நுட்பங்களுடன் புதிய வகை கார்கள் அறிமுகப்படுத்த 14 பில்லியன் யூரோ முதலீடு செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது

இன்று நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில், வோல்க்ஸ்வாகன் நிறுவனத்தின் பிரீமியம் கார் பிராண்டான ஆடி , 2023 ஆம் ஆண்டில் 14 பில்லியன் யூரோக்கள் ($ 15.9 பில்லியன்) முதலீடு செய்யப்படும் எனவும் இதன் மூலம் மின் இயக்க கார், டிஜிட்டல் கார் மற்றும் தான் இயக்கி கார் போன்ற புதிய தொழில்நுட்பங்களுடன் புதிய வகை கார்கள் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிறுவனத்தின் மொத்த திட்டமிடப்பட்ட செலவு 40 பில்லியன் யூரோக்கள் என்றும், நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் ஏற்கனவே 1 பில்லியன் வருவாய் ஈட்டக்கூடிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை இது திட்டமிட்டுள்ளது.

"இந்த திட்டமிடல் குறித்து ஒரு தெளிவான நோக்கம் உள்ளது, மின் திட்ட அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம், இதன் எதிர்காலம் குறித்து அதிக கவனம் செலுத்துகிறோம்" என்று ஆடி நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக குழு தலைவர் ப்ரம் ஸ்கோட் தெரிவித்தார்.

மின்-இயக்க கார்களை தயாரிக்க 14 பில்லியன் யூரோ முதலீடு செய்யும் ஆடி நிறுவனம்!!!

"வரும் காலத்தில், சந்தைக்கு மிகவும் கவர்ச்சிகரமானதும் பொருத்தமானதுமான தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளித்து வருகிறோம்" என்றார் ஆடி நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக குழு தலைவர் ப்ரம் ஸ்கோட் .

Audi to invest 14 billion euros in e-mobility, self-driving cars 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.