Skip to main content

மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி - குவியும் வாழ்த்து!

மக்களவை தேர்தல்

2019 மக்களவை தேர்தலில் பாஜக 330-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஒன்றாக வளர்வோம், ஒன்றாக வளர்ச்சி பெறுவோம், ஒன்றிணைந்து வலிமை மிக்க இந்தியாவை உருவாக்குவோம். இந்தியா மீண்டும்வெற்றி பெற்றுள்ளது''  என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் உள்ள அனைத்து நாடாளுமன்றத்தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 

narendra modi

இதுவரை பாஜக 346 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதில் 24 தொகுதிகளில் பாஜக வெற்றி உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் 89 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது, இதுவரை 7 தொகுதிகளில் வெற்றிபெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. 

பிற காட்சிகள் 106 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை 1 தொகுதியில் வெற்றிபெற்றுள்ளது.

narendra modi

மீண்டும் ஆட்சி அமைப்பது தொடர்பாக வரும் 26-ம்தேதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார் பிரதமர் மோடி. 

இதனால் தனி பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. 

இரண்டாம் முறையாக ஆட்சி அமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

World leaders congratulate PM Modi on historic victory in general elections

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.