Skip to main content

மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளி மாணவியின் அறிவியல் கண்டுபிடிப்புக்கு கூகுள் நிறுவனம் பாராட்டு!

கூகுள் நிறுவனம் பாராட்டு!

ஏடிஎம் மெஷினில் ரூபாய் நோட்டுகள் வருவதைப்போல, நாணயங்கள் தரும் காயின் வெண்டிங் மெஷினைக் கண்டுபிடித்திருக்கிறார் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளி மாணவி தர்ஷினி.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளி மாணவியின் அறிவியல் கண்டுபிடிப்பிற்கு, உலக புகழ்பெற்ற கூகுள் நிறுவனம் பாராட்டு தெரிவித்து மாணவி தர்ஷினியை அங்கீகரித்துள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஈடுபாடு கொண்ட மாணவர்களின் சிந்தனை திறனை ஊக்குவிக்கும் வகையில், கூகுள் நிறுவனம் அவ்வப்போது போட்டிகளை நடத்தி வருகிறது.

கூகுளின் இந்த ஆன்லைன் தேர்வில், உலகின் எந்தப்பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் பங்கேற்கலாம்.

உதவிய ஆசிரியர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளியில், 8 ஆம் வகுப்பு படிக்கும் தர்ஷினியின் அறிவியல் ஆர்வத்தை புரிந்து கொண்ட, ஆசிரியர் சரவணன், கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற கூகுளின் அறிவியல் திறனாய்வு போட்டியில் மாணவியை கலந்துகொள்ள ஊக்குவித்திருக்கிறார்.

ஏடிஎம் மெஷினில் ரூபாய் நோட்டுகள் வருவதை போல, காயின்கள் தரும் காயின் வெண்டிங் மெஷினை கண்டு பிடித்துள்ளார் தர்ஷினி. 

கூகுள் நிறுவனம் பாராட்டு:

இது தொடர்பான காணொளி பதிவையும் ஆசிரியர் உதவியுடன் கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பியிருந்தார் தர்ஷினி.

அதற்கு ஒப்புதல் அளித்து சான்றிதழ் வழங்கிய கூகுள் நிறுவனம், " உங்கள் யோசனையை உலகுக்கு தெரிவித்தமைக்கு நன்றி" என தர்ஷினியை பாராட்டியிருக்கிறது.

Google recognises Tamil Nadu class 8 student for her invention, says 'Thank you for your idea'

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.