Skip to main content

மேற்கு வங்கத்தின் ஜாதவ்பூரில் பேரணி நடத்த அமித் ஷாவிற்கு அனுமதி மறுப்பு!

amit shah

மக்களவை தேர்தல் ஆறு கட்டங்களாக முடிந்த நிலையில், 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேர்தல் களம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.  

இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷாவின் மிக பிரமாண்டமான பொதுக்கூட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

amit shah

இந்த கூட்டத்திற்கு அனுமதி அளிக்க காவல்துறையினர் மறுத்து விட்டனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டதால் அம்மாநில பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தியுள்ளது. 

அமித்ஷா பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்ததை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் பாஜகவினர் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 

Amit Shah Denied Permission to Hold Rally in West Bengal's Jadavpur

amit shah

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.