Skip to main content

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது.

கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா, மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதிய இரண்டாவது டி20 போட்டி, லக்னோ அடல்பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நவம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன் படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடி 61 பந்துகளில் 111 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் அதிக (4) சதம் அடித்த முதல் வீரா் என்ற பெருமையை ரோகித் ஷர்மா பெற்றார். இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் சேர்த்தது. 

இந்நிலையில் கடைசி போட்டி வரும் நவம்பர் 11 ஆம் தேதி மாலை 7 மணியளவில் நடைபெற உள்ளது. 

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி வீரர்கள் இந்திய அணியினரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். விக்கெட்டுகள் மளமளவென சரிந்த நிலையில் அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 124 ரன்களுக்கு சுருண்டது. 

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது.

India won the T20 series against WestIndies with points 2-0.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.