Skip to main content

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதும் டி 20 தொடர் நாளை முதல்!!!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதும் டி 20 தொடர் நாளை முதல்!!!

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் நவம்பர் 4 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
 

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடர், ஒரு நாள் தொடர்,  டி 20 தொடர்களில் விளையாடி வருகிறது.

2 டெஸ்டிலும் இமாலய வெற்றி பெற்ற இந்திய அணி, 2-0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. 

அதுபோல் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி, 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இரு அணிகள் இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் நாளை நவம்பர் 4 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து 2-வது ஆட்டம் 6-ம் தேதி லக்னோவிலும், கடைசி ஆட்டம் 11-ம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறுகிறது. இந்நிலையில் சேப்பாக்கம் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (நவ.4-ம் தேதி) காலை 11.30 மணிக்கு தொடங்கும் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

சி, டி கேலரிகளின் லோயர் டிக்கெட்களின் விலை ரூ.1200 என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்களை பூத் எண் 6-ல் பெற்றுக்கொள்ளலாம்.

ரூ.2,400 விலை கொண்ட இ கேலரியின் டிக்கெட்களை பூத் எண் 4-ல் பெறலாம்.

சி, டி, இ கேலரியின் குளிர்சாதன அறை டிக்கெட் விலை ரூ.4,800 எனவும், ஹெச் கேலரி குளிர்சாதன அறை டிக்கெட் விலை ரூ.8,000.

ஜி கேலரி குளிர்சாதன அறை டிக்கெட் விலை ரூ.12,000.

ஹெச் கேலரி லோயர் குளிர்சாதன அறை டிக்கெட் விலை ரூ.4,800.

அண்ணா பெவிலியன் முனை டிக்கெட் விலை ரூ.4,000.

பெவிலியன் டெரஸ் டிக்கெட் விலை ரூ.8,000 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

India vs West indies T20 series begins from november 4 sunday.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.