Skip to main content

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா

ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச அரங்கில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில்: 

இந்த டெஸ்ட் போட்டியில் உமேஷ் யாதவின் பந்துவீச்சு அபாரம். 10 விக்கெட்களை வீழ்த்தி மேற்கிந்தியத் தீவுகள் அணியை நிலைகுலையச் செய்துவிட்டார் உமேஷ்.

இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரைக் கைப் பற்றுவதற்கு முக்கியக் காரணமாக உமேஷ் இருந்தார். விரைவில் ஆஸ்திரேலியா வுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் செய்யவுள்ளது. ஆஸ்தி ரேலியாவிலுள்ள மைதானங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றவை. எனவே ஆஸ்திரேலியத் தொடரில் உமேஷ் யாதவ் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

இன்றைய போட்டியில் அவர் முக்கிய தருணங்களில் விக்கெட் களை வீழ்த்தினார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்குர் பந்துவீச இயலாத நிலையில் உமேஷ் யாதவ் தனி யொரு வீரராக அருமையான வேகத்தில் பந்து வீசினார். மேலும் தனது உடற்தகுதியை சீராக வைத் துள்ளார்.

உமேஷ் யாதவ் மிகவும் திறமை யான பந்துவீச்சாளர். ஆனால் பலர் அதை உணரவில்லை. எதிரணி வீரர்களால் ஆட இயலாத பந்துகளை அவர் அற்புதமாக வீசினார்.

முதல் டெஸ்ட்

இந்தியா வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கு பெற உள்ளது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்சிஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி

இந்நிலையில் இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் மேற்கிந்திய அணி, 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆட்டமிழந்தது.

இதையடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய மேற்கிந்திய அணி, 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு எளிதான 72 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது மேற்கிந்திய அணி.

இந்நிலையில் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு, பிரித்வீ ஷா, ராகுல் கைகொடுக்க, இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி, 75 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இதன்மூலம், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

india vs west indies test match series 2018 india won the series by 10 wickets

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.