Skip to main content

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா !!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா !!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றியது இந்தியா
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5 வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணி 104 ரன்களுக்குச் சுருண்டது, எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா 14.5 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. 
 

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 5 வது ஒருநாள் போட்டியில் ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்த மேற்கிந்திய தீவுகள் அணி 104 ரன்களுக்குச் சுருண்டது, இதனையடுத்து எளிய இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது இந்திய அணி 14.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 105 என்று வெற்றி பெற்றதில், ரோஹித் சர்மா 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார், விராட் கோலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரோஹித் சர்மா 4 சிக்சர்களை அடித்தார். இதில் 2வது சிக்சர் அவரது 200 வது சிக்சர் என்ற மைல்கல்லை எட்டியது.

ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் 1000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார்.

ரோஹித் சர்மா அன்று சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் சிக்சர்கள் சாதனையை முறியடித்தார், பிறகு  198 சிக்சர்களுடன் இன்று களமிறங்கினார். தற்போது 200வது சிக்சரை எட்டினார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா !!!

இதன் மூலம் அப்ரீடி, கெய்ல், ஜெயசூரியா, தோனி, டிவில்லியர்ஸ், மெக்கல்லம் என்ற உயர்மட்ட வரிசையில் இணைந்தார் ரோஹித்.

மேலும் ரோஹித் சர்மா 376 ரன்களுக்கும் மேல் ரன்கள் சேர்த்து இந்த தொடரில் மேற்கு இந்திய  தீவுகளுக்கு எதிராக தொடரில் அதிக ரன்கள் சேர்த்த 2 வது வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 

சிக்சர்கள் பட்டியலில் ஷாகித் அஃப்ரீடி 351 சிக்சர்களுடன் முதலிடம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு விக்கெட்களை வீழ்த்தியதால் ஆட்ட நாயகனாக ஜடேஜாவும், ஒரு நாள் தொடரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக இந்தியா அணி கேப்டன் கோலி தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

India won the one day series against west indies. 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.