Skip to main content

மேக் இன் ஒடிசா மாநாட்டில் - முகேஷ் அம்பானி

மேக் இன் ஒடிசா மாநாட்டில் - முகேஷ் அம்பானி

ஒடிசாவில் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய தொழில்கள் மூலம் 3 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அதன் தலைவரும், நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி நேற்று நவம்பர் 12 ஆம் தேதி தெரிவித்தார்.

மேக் இன் ஒடிசா மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி ஒடிசா மாநிலத்தில் மேலும் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்யப் போவதாகக் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “கடந்த சில வருடங்களில் ரிலையன்ஸ் நிறுவனம் ஒடிசா மாநிலத்தின் மிகப்பெரிய முதலீட்டாளராக மாறியுள்ளது. ஒடிசாவில் புதிய தொழில்களில் மேலும் ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடு செய்ய ரிலையன்ஸ் தயாராக உள்ளது.

ரிலையன்ஸ் இதுவரை செய்த முதலீடுகளால் ஒடிசாவில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியிருக்கிறது.

ரிலையன்ஸ் ஜியோ தனது தொழிலை தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் இணைய பயன்பாட்டில் 155 வது இடத்தில் இருந்த இந்தியா உலக அளவில் முதல் இடத்தை அடைந்துள்ளது.

தற்போது கிகா ஃபைபர் பிராட்பேண்ட் சேவையின் மூலம் வீடுகளுக்கான பைபர் நெட்வொர்க் சேவையைக் கொண்டு செல்ல இருக்கிறோம்.

மேக் இன் ஒடிசா மாநாட்டில் - முகேஷ் அம்பானி
மேக் இன் ஒடிசா மாநாட்டில் - முகேஷ் அம்பானி

 

இன்னும் மூன்று ஆண்டுகளில் இந்தப் பிரிவிலும் உலகின் முன்னணி பிராட்பேண்ட் சேவை நாடுகளின் பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் வருவதே இலக்கு” என்றார்.

ரிலையன்ஸ் ஏற்கெனவே ரூ. 6 ஆயிரம் கோடி முதலீடுகளை ஒடிசாவில் செய்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, திங்களன்று தனது நிறுவனம் உலகின் மிகப்பெரிய இணைய வழி புதிய வர்த்தக தளத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.

ஜியோவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளுடன் ரிலையன்ஸ் ரீடெய்லின் உடல் சந்தையினுடைய சக்தியை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த புதிய தளத்தை உருவாக்கி, இந்தியாவில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்தை பெறமுடியும் என்றார் அம்பானி.

இந்நிறுவனம் நாட்டில் 3 கோடி வியாபாரிகளின் வர்த்தகத்தை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Reliance building world's largest online-to-offline platform; to benefit 3 crore merchants, says Mukesh Ambani

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.