Skip to main content

மே 22 தூத்துக்குடி கலவரம்: முதலாம் ஆண்டு நினைவு தினம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக்கோரி கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அப்போது ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை

இந்த சம்பவம் நடந்து இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த போராட்டத்தில் உயிர் இழந்தவர்களுக்கு போராட்ட குழுவினர் மற்றும் மக்கள் சார்பில் தூத்துக்குடி நகர் பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் நினைவு அஞ்சலி கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதனை முன்னிட்டு தூத்துக்குடி நகர் மற்றும் புறநகர் பகுதியில் பாதுகாப்புக்காக காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறை

இதற்காக விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு உள்ளனர். 

தூத்துக்குடி சிப்காட் வளாகம், கலெக்டர் அலுவலகம், எப்.சி.ஐ. குடோன், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி பகுதி, தென்பாகம் போலீஸ் நிலையம், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளன.

A year on, Victim families of Thoothukudi Violence await justice

thuthukudi violence

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.