Skip to main content

மாவோயிஸ்ட் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் நியமனம்!!!

மாவோயிஸ்ட் அமைப்பின் புதிய பொதுச் செயலாளர் நியமனம்!!!

மாவோயிஸ்ட் அமைப்பின் பொதுச் செயலாளராக பதவி வகித்த‌ கணபதி உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், இவரது பொறுப்பில் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த எம்.டெக் பட்டதாரியான பஸ்வராஜு என்கிற கேசவ ராவ் மாவோயிஸ்ட் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக நியமனம் செய்ய ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தென்னிந்தியாவில் உள்ள இயக்கமான ‘மக்கள் போர்’ அமைப்பும், வட இந்தியாவின் ‘மத்திய மாவோயிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட்’ (எம் சிபிஐ) மற்றும் மற்ற சமூக போராட்ட அமைப்புகளும் கடந்த 2004-ம் ஆண்டு ஒன்றாக இணைந்து சிபிஐ (மாவோயிஸ்ட்) என உருவானது.

கடந்த 1993-ல் ‘மக்கள் போர்' அமைப்பின் செயலாளராக பணியாற்றிய கொண்டபல்லி சீதாராமய்யா என்பவர் விலகிக் கொண்டதால், மாபள்ள லட்சுமண ராவ் என்கிற கணபதி, 2004-ம் ஆண்டு வரை இதன் செயலாளராக தொடர்ந்தார்.

மாவோயிஸ்ட் இயக்கம் உருவானது முதல் கணபதியே பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார். தற்போது இவரின் வயது 69 ஆகும். மேலும், சில உடல் உபாதைகளும் உள்ளன. இந்த இயக்கத்தில் உள்ள பலர் 60 வயது நிரம்பியவர்களாவர்.

M Lakshman Rao alias Ganapathi (
M Lakshman Rao alias Ganapathi 

 

கணபதி பற்றி தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு என ஆந்திரா, தெலுங்கானா சத்தீஸ்கர், ஒடிசா மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் இவரின் உடல் நலம் சரியில்லாத காரணத்தினால், இவரது பொறுப்பில் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தை சேர்ந்த எம்.டெக் பட்டதாரியான பஸ்வராஜு என்கிற கேசவ ராவ் மாவோயிஸ்ட் அமைப்பின் புதிய பொதுச் செயலாளராக நியமனம் செய்ய ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது தலைக்கும் ஆந்திரா, தெலுங்கானா சத்தீஸ்கர், ஒடிசா மாநில அரசுகள் ஏற்கெனவே ரூ. 25 லட்சம் பரிசு அறிவித்துள்ளனர். கணபதி பொதுச் செயலாளராக தனது பதவியை ராஜினாமா செய்தாலும், அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய ஆலோசகராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகிக்க உள்ளார்.

Andhra Pradesh Maoist chief Ganapathi replaced by Baswaraj, say police

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.