Skip to main content

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவில்

ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாளில் 1 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்படும். இந்த நிலையில் சபரிமலை கோவிலில் சுவாமி ஐயப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தையொட்டி ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்தார்.

ஜூன் 11 ஆம் தேதி சுவாமி ஐயப்பனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. வேறு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.

sabarimalai ayyapan temple

இன்று ஜூன் 12 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடைதிறக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு பிரதிஷ்டை தின விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றது. 

சபரிமலை கோவிலில் நடைபெற்ற பிரதிஷ்டை தின பூஜையை யொட்டி சபரிமலையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர். 

அவர்கள் தலையில் இருமுடி கட்டு சுமந்து சென்று சரணகோ‌ஷம் முழங்க சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்தனர். 

இன்று ஜூன் 12 ஆம் தேதி இரவு 10 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். அதன் பிறகு அரிவராசனம் பாடல் பாடப்பட்டு ஐயப்பன் கோவில் நடை அடைக்கப்படும்.

Lord Ayyappa Temple in Sabarimala Opened for Monthly Pooja.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.