Skip to main content

மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு!!!

மாணவர்களின் புத்தகச்சுமையை குறைக்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவு!!!

I மற்றும் II வகுப்புகளுக்கு எந்தவிதமான வீட்டுப்பாடமும் கொடுக்கக்கூடாது, ஒவ்வொரு வகுப்பிற்கும் புத்தகப் பைகள் பரிந்துரைக்கப்படும் எடை வரம்புக்குள் இருக்கவேண்டும் என நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வழங்கப்பட்ட புதிய உத்தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்கள் படி, I மற்றும் II வகுப்பு மாணவர்களுக்கு வீட்டு பாடம் ஒதுக்க முடியாது.

NCERT கீழ் 1 மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம் மற்றும் கணிதம் பாடங்களை தவிர்த்து வேறு பாடங்கள் பரிந்துரைக்க கூடாது. மேலும் மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மொழி, சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை தவிர வேறு எந்தவொரு பாடத்தையும் பரிந்துரைக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் புத்தகங்கள், கூடுதல் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்று மாணவர்கள் கேட்கப்படக் கூடாது, மற்றும் பள்ளி பையின் எடை பரிந்துரைக்கப்பட்ட வரம்பை மீறக்கூடாது.

I மற்றும் II வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி பைகள் எடை 1 கிலோக்கு மேல் இருக்கக்கூடாது, அதே நேரத்தில் III முதல் V வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி பைகள் 2 கிலோ முதல் 3 கிலோ வரை எடையைக் கொண்டிருக்க வேண்டும்.

 VI மற்றும் VII வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி பைகள் எடை 4 கிலோக்கு மேல் இருக்கக்கூடாது, அதே நேரத்தில் VIII மற்றும் IX வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி பை எடை 4.5 கிலோக்கு மேல் இருக்கக்கூடாது.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி பையில் 5 கிலோவுக்கு மேல் இருக்கக்கூடாது.

HRD ministry limits school bag weight, scraps homework for class I and II students

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.