Skip to main content

"மான்புக்கர் பரிசு" பெற்ற முதல் அராபிய எழுத்தாளர் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி!

Jokha Alharthi

பல நாடுகளை சேர்ந்த எழுத்தாளர்களின் படைப்பில் வெளியான நூல்கள், நாவல்கள் மற்றும் புதினங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பிரிட்டன் நாட்டில் வெளியிடப்படும் நாவல்களில் ஆண்டுதோறும் சிறந்த நாவல் தேர்வு செய்யப்பட்டு அதற்கு "மான்புக்கர் பரிசு" அளிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 50 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவரும் வழக்கப்படி, இந்த ஆண்டுக்கான சிறந்த நாவலை தேர்வு செய்ய தலைநகர் லண்டனில் ஐந்து நீதிபதிகளை கொண்ட தேர்வு குழுவினர் ஓமன் நாட்டை சேர்ந்த பிரபல பெண் எழுத்தாளரான ஜோக்ஹா அல்ஹார்த்ஹி எழுதிய "செலஸ்ட்டியல் பாடீஸ்" (Celestial Bodies) (புனிதமான உடல்கள்) என்ற நாவலை தேர்வு செய்தனர்.

Jokha Alharthi

லண்டன் நகரில் நேற்று மே 21 ஆம் தேதி நடைபெற்ற மான்புக்கர் பரிசுடன் 50 ஆயிரம் பவுண்டுகளை ரொக்கப் பரிசும் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி-க்கு வழங்கப்பட்டது.

"செலஸ்ட்டியல் பாடீஸ்" (Celestial Bodies)

ஓமன் நாட்டில் முன்னர் இருந்த பெண்ணடிமை முறையையும், அந்த காலக்கட்டத்தில் 3 சகோதரிகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் திருமண பந்தம் போன்றவை உணர்வுப்பூர்வமாகவும் மிகவும் நேர்த்தியாகவும் "செலஸ்ட்டியல் பாடீஸ்" கதைக்களம் சித்தரிக்கப்பட்டுள்ளது. 

celestial bodies

ஜோக்ஹா அல்ஹார்த்ஹி எழுதிய அரபு மொழி ஆக்கத்தை மரிலின் பூத் என்ற பெண்மணி மிக அழகாகவும் தெளிவாகவும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 

40 வயதாகும் ஜோக்ஹா அல்ஹார்த்ஹி இந்தப் பரிசை பெறும் முதல் அராபிய எழுத்தாளர் என்பதும் இதற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர்களான அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் பெருமைக்குரிய இந்தப் பரிசை பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Oman author Jokha Alharthi wins Booker International Prize

Jokha Alharthi

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.