கேரள மாநிலத்தின் சிறப்பு மிக்க நேந்திரம் சிப்ஸ் மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான தின்பண்டங்களில் ஒன்று. அதில் உப்பும் காரமும் ஏற்ற படி உள்ளதால் அனைவரும் அதை சிறந்த மாலைநேர திண்பண்டமாக எடுத்துக்கொள்ளலாம்.
நேந்திரம் சிப்ஸ் செய்முறை
தேவையான பொருட்கள்:
நேந்திரங்காய் - 3
உப்பு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
செய்முறை :
- எண்ணெயை ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைத்து, அதில் மிதமான சூடு வந்தவுடன் ஒரு நேந்திரம் துண்டை எண்ணெயில் போட்டவுடன் மேலே வந்தால் எண்ணெய் சரியான சூட்டில் உள்ளது என்று அர்த்தம்.
- ஒரு வழைப்பழத்தை எடுத்து உலர வைத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- துண்டுகளை எண்ணெயில் போட்டு விட வேண்டும்
- சில வினாடிகள் கழித்து மஞ்சள்தூள் கலந்த தண்ணியை எண்ணெயில் கலந்து கிளறிவிட வேண்டும்.
- சிறிது நேரம் கழித்து சிப்ஸை எடுத்துவிடலாம்
- எண்ணெயில் இருந்து எடுத்தவுடன் அதை ஒரு காகித துணிமேல் வைத்தால் தேவை இல்லா எண்ணெய் வெளியேறும்.
- இதை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது தனியாக தின்பண்டமாக சாப்பிடலாம்.
வீட்டில் வாழைப்பழ சிப்ஸ் செய்ய சில டிப்ஸ் :
- அதிகமாக பழுத்த பழத்தை பயன்படுத்த வேண்டாம்.
- எண்ணெய் சரியான சூட்டில் உள்ளதா என்று தெளிவுபடுத்திக்கொள்ளவும்.
- வறுப்பதற்கு முன் அதில் உப்பு போட வேண்டாம்.
- ஒவ்வொன்றாக எண்ணெயில் போட வேண்டும்.
- அடிக்கடி திருப்பி போட்டு கொண்டிருக்க வேண்டும்
- அதன் வண்ணம் மாறுவதை வைத்து சிப்ஸ் தயாராகிவிட்டதா என்பது தெரிந்துவிடும்
- சூடாக இருக்கும் போது அதில் மிளகாய் தூவிவிடுங்கள்.
- அதை ஆற வைத்து பரிமாறுங்கள்.
- வறுக்க தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தவும்
How to prepare home made banana chips
Tamil