Skip to main content

மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி‍

மாலை வேளைகளில் குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி‍

பொதுவாக மாலை வேளைகளில் குழந்தைகள் விரும்பி உண்ணும் சுவையான கீர் ரைஸ் புட்டிங்கை சமைத்துக் கொடுக்கலாம். இது அவர்கள் உற்சாகமாக விளையாடவும், சோர்வை போக்கி புத்துணர்வுடன் இருக்கவும் உதவும்.

தேவையான பொருட்கள்

தேங்காய் பால் - 2 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 3 மேசைக் கரண்டி
பாஸ்மதி அரிசி - 1/2 கப்
உலர் திராட்சை - 1/4 கப்

செய்முறை

பாஸ்மதி அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். அடுப்பை பற்றவைத்து பாத்திரத்தில் பால், தேங்காய் பால், மற்றும் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் பாஸ்மதி அரிசியை சேர்க்கவும்.

அரிசி நன்கு குழைந்து வரும் வரை கொதிக்க விடவும். அடிப்பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும்.

பின் ஏலக்காய் பொடி, ரோஸ் வாட்டர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டுக் கிளறவும்.

இறுதியாக புட்டிங்கை அடுப்பிலிருந்து இறக்கவும். கடாயில் நெய் ஊற்றி திராட்சை, முந்திரி, பாதாம், பிஸ்தா சேர்த்து வதக்கி புட்டிங்கில் ஊற்றவும்.

தற்போது சுவையான கீர் ரைஸ் புட்டிங் தயார்.

Kheer Rice Pudding ingredients and method of cooking

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.