Skip to main content

மைனஸ் 7 டிகிரியை தொட்ட காஷ்மீர் - மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

மைனஸ் 7 டிகிரியை தொட்ட காஷ்மீர் - மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

கடந்த 28 ஆண்டுகளில் முதல் முறையாக காஷ்மீரின் ஸ்ரீநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஏழு டிகிரி செல்சியஸ் தொட்டது.

குடியிருப்பாளர்கள் குழாய்களில் உறைந்த குடிநீரை, எரிபொருட்களை கொண்டு சூடாக்க வேண்டியுள்ளது. "காலையில் 10 மணி அளவிலும் தண்ணீர் தொட்டி மற்றும் குழாய்கள் உறைந்திருக்கும். முழு குடும்பமும் தங்கள் தினத்தை துவங்குவதற்கு காத்திருக்கிறது " என்று ஸ்ரீநகரின் லால் பஜார் பகுதியில் இருந்து வங்கியாளரான அஜீஸ் அகமது கூறினார்.

டீசல் வாகனங்களை இயக்குபவர்கள், உறைபனி வெப்பநிலை காரணமாக, தங்கள் வாகனங்கள் இயங்காமல் இருப்பதால், தங்கள் பயணத்தை துவங்குவதால் தாமதம் கொள்கின்றனர்.

மைனஸ் 7 டிகிரியை தொட்ட காஷ்மீர் - மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

புகழ்பெற்ற தால் ஏரி உள்ளிட்ட பல்வேறு நீர்வழிகள் பனியில் மூழ்கின.

ஸ்ரீநகரின் குறைந்தபட்ச வெப்பநிலையானது, சாதாரணமாக ஐந்து டிகிரி செல்சியஸ் வெப்பநிலையாக இருக்கும், டிசம்பர் 7, 1990 ஆம் ஆண்டு முதல் முதல் முறையாக மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் பதிவானது. அதன் பிறகு நேற்று டிசம்பர் 28 ஆம் நாள் வெப்பநிலை மைனஸ் 7 டிகிரி செல்சியஸ் என பதிவானது.

முக்கிய சுற்றுலாத்தலங்கள் உறைந்தன:

"பஹல்கம் மற்றும் குல்மார்க்கில் முறையே மைனஸ் 8.3 டிகிரி செல்சியஸ் மற்றும் மைனஸ் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது" என ஜம்மு காஷ்மீர் வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார். மாநிலத்தில் மிக குறைந்தபட்ச வெப்பநிலை கார்கில் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அங்கு மைனஸ் 16.2 ° செல்சியஸ் மற்றும் பகல் நேரத்தில் வெப்பநிலை மைனஸ் 3.2 செல்சியஸ் கொண்டிருக்கும்.

டாக்டர்கள் சங்கம், இதயத் தாக்குதல்களின் அதிகரிப்பு பற்றி எச்சரிக்கிறது, உச்ச குளிர்காலத்தில் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் 53% மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிக்கும் என ஒரு ஆராய்ச்சியை மேற்கோள்காட்டி எச்சரிக்கை செய்தது.

மைனஸ் 7 டிகிரியை தொட்ட காஷ்மீர் - மருத்துவர்கள் எச்சரிக்கை!!!

"கடுமையான குளிர்கால வெப்பநிலை, உடம்பில் உள்ள ரத்த நாளங்களைக் கட்டுப்படுத்துகிறது, மேலும் அது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இத்தகைய நிலையில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் அதிகமாகும். ரத்த அழுத்தம், கடுமையான குளிர்ச்சியாக இருக்கும் போது, ​​இரத்தத்தை எளிதாக உறைய செய்கிறது" என காஷ்மீர் மாநில மருத்துவ சங்க தலைவர் டாக்டர் நிசார்-உல்-ஹசன் கூறினார்.

Kashmir freezes as mercury dips to -7°

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.