Skip to main content

'மைக்ரோசாப்ட் பெயிண்ட்' தொடர்ந்து நீடிக்கும் - ‍மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவிப்பு!

மைக்ரோசாப்ட் நிறுவனம்

கணினி பயன்பாட்டாளர்களிடையே மிகவும் பிரபலமான 'மைக்ரோசாப்ட் பெயிண்ட்' மென்பொருளை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதில்லை என்று மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் என்னும் இயங்குதளம்தான் (Operating System) உலகின் பெரும்பாலான கணினிகளில் இயங்கி வருகிறது.

கணினிகளை முதல் முறையாக இயக்குபவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் மென்பொருளாக காலம் காலமாக மைக்ரோசாப்ட் பெயிண்ட் இருந்து வருகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம்

இந்நிலையில், மைக்ரோசாப்ட் பெயிண்டை தனது இயங்குதளத்திலிருந்து நீக்கப் போவதாக கடந்த 2017ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் அறிவித்தது.

அதற்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பவே அம்முடிவு கைவிடப்பட்டது.

இந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்பட்ட 10 வது பதிப்பு அடுத்த மாதம் வெளியிடப்படவுள்ள நிலையில், எம்.எஸ் பெயிண்டின் நிலை என்ன ஆகுமென்று அதன் பயன்பாட்டாளர்கள் மிகுந்த கவலையில் இருந்தனர்.

இந்நிலையில், விண்டோஸ் இயங்குதளத்தின் மேம்படுத்தப்படுத்த பதிப்பில் எம்.எஸ் பெயிண்ட் நீக்கப்படவில்லை என்று அந்நிறுவனத்தை சேர்ந்த மூத்த மென்பொறியாளர் ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Microsoft Paint to remain part of Windows 10 after all

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.