Skip to main content

குவிக்கப்பட்ட உருளைக்கிழங்கின் விலை கிலோ 2 ரூபாய் !!

உருளைக்கிழங்கு

மொத்த விற்பனை சந்தையில் உருளைக்கிழங்கின் விலை இந்த ஆண்டு, முதல் மூன்று பருவங்களில் குறைந்துவிட்டதால், பருவத்தின் இறுதியில் விலை உயர்வை எதிர்பார்த்து உருளைக்கிழங்குகளை சேமித்து வைத்திருந்த வியாபாரிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக நாட்டின் மொத்த சந்தைகளில் கிலோவிற்கு 9 ரூபாய் முதல் 12 ரூபாய் விற்றுவந்த உருளைக்கிழங்கு தற்போது, கிலோவிற்கு 2 முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்று வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். வரவிருக்கும் வாரங்களில் புதிதாக அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகள் வரத்து வரும் வரை விலைகள் உயர வாய்ப்பில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெரும்பாலான உருளைக்கிழங்கு விவசாயிகள் முந்தைய ஆண்டுகளில் இருந்ததை விட விலை சிறப்பாக இருந்ததாகவும், வருமானம் நன்றாக கிடைத்ததாகவும் கூறினர். ஆனால் உருளைக்கிழங்கு சேமிப்பில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளும், விவசாயிகளும் உடனடியான இழப்புக்களை எதிர்கொள்வதாக உத்தரபிரதேச கோல்ட் ஸ்டோர் சங்கத்தின் தலைவர் மகேந்திர ஸ்வரூப் தெரிவித்தார்.

பொதுவாக, 60-70% விவசாயிகளுக்கு முன்கூட்டியே வழங்கப்படும் குளிர் சேமிப்பு வசதிகளின் உரிமையாளர்கள் இழப்பு பெருமளவில் பாதிக்கப்படும் என்று ஸ்வரூப் கூறினார். பருவத்தின் முடிவில் விலைவாசி உயர்வை விவசாயிகள் எதிர்பார்த்த நிலையில் இந்த ஆண்டு விலைகள் உயர்ந்திருந்தன என்றும் அவர் கூறினார்.

மொத்த விலைகள்.கிலோவிற்கு 9 முதல் 12 வரை இருந்தபோது மற்றும் சில்லரை விலைகள் கிலோவிற்கு 18 முதல் 20 வரை இருக்கும்போதும் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் வணிகர்கள் உருளைக்கிழங்குகளை கையகப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் மட்டும் 9 லட்சம் டன் உருளைக்கிழங்கு குளிர் சேமிப்பு பொதிகளில் பயன்படாமல் கெட்டுப்போனது.

Inventory pile-up sends potato crashing to Rs 2 per kg.

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.