Skip to main content

கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா கடிதம்!

சோனியா

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மே 19 ஆம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 23 ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக இரண்டிற்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காது என கூறப்படுகிறது.

இதனால் இரண்டு கட்சிகளும் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் முனைப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. 

sonia gandhi

இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன், மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 ஆம் தேதி அன்று ஆலோசனை நடத்த சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 

மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத மாநில கட்சிகளான பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். 

இது தொடர்பாக ஒவ்வொரு கட்சித் தலைவருக்கும் சோனியா காந்தி தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

Former Congress President Sonia Gandhi invites TRS, TD, YSRC for May 23 meet.

congress

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.