Skip to main content

குப்பைமேனி! மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை!

image

குப்பைமேனி  

ஒரு மருத்துவ மூலிகைகச் செடியாகும். ஓராண்டுத் தாவரமான இச்செடி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையனவாகும்.
 

மருத்துவ குணங்கள்
* இலை மலம் இளக்கியாகும்
* சொறி, சிரங்கு, உடல் அரிப்புக்கு மேற்பூச்சாகவும் பயன்படுகிறது
* இலைச் சாறு பாம்புக்கடி நஞ்சினை முறிக்கவும் பயன்படுகிறது.
* நெஞ்சுச் சளியை இளக்கி வெளியேற்றவும் பயன்படுகிறது
* இதன் வேர் பேதி மருந்துத் தயாரிப்பில் பயன்படுகிறது

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்!

வீதியெங்கும் விளைந்து கிடக்கும் குப்பைமேனி பற்றி அறிந்து கொள்வோம்… ‘குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, ‘சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே… அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி… மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

குப்பையான மேனியைக் குணப்படுத்தும்! ‘உணவே மருந்து… மருந்தே உணவு’ எனச் சொன்ன முன்னோர்களின் அறிவை, கை கொள்ளாததன் விளைவு, பல்வேறு பிணிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது, நம் உடம்பு. இப்படி, நோயால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால்தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்திருக்குமோ… என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது, இதன் பயன்பாடு.

  பூனைகளுக்கு ஏற்படுகிற நஞ்சினை நீக்குவதற்கான மருந்து
 குடற்புழு நீக்க மருந்து!
 மூலத்தை, நிர்மூலமாக்கும்
 தோல் நோய் குணமாகும்!

Tamil