Skip to main content

குழந்தைகளுக்கு இந்தி, ஆங்கிலம் வாசிக்க கற்றுக்கொடுக்கும் கூகுளின் "BOLO"!

bolo

தொடக்கநிலை பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இந்தி மற்றும் ஆங்கில மொழிகளை வாசிக்க கற்றுக்கொடுக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சார்பில் "BOLO" எனும் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதன் முதலில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இலவச செயலி, Google இன் பேச்சு அங்கீகாரத்தையும் உரை-பேச்சு-தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.

இந்த செயலி, ஒரு அனிமேட்டட் கதாபாத்திரம் தியாவைக் கொண்டுள்ளது, அந்த கதாபாத்திரம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் உள்ள கதைகளை குழந்தைகள் உரக்க வாசிப்பதை ஊக்குவிக்கிறது. குழந்தை ஒரு வார்த்தையை உச்சரிக்க முடியவில்லையெனில் இந்த கதாபாத்திரம் அந்த குழந்தைக்கு உதவுகிறது. அந்த குழந்தை வாசித்து முடித்ததும் அந்த கதாபாத்திரம் குழந்தையை பாராட்டுகிறார்.

bolo app

"ஆப்லைனில் பயன்படுத்த இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே பயனர்கள் 50MB கொண்ட இந்த செயலியை ஒருமுறை பதிவிறக்கம் செய்ய வேண்டும், பின்னர் பயனர்கள் இந்த செயலியில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் உள்ள 100 கதைகளை வாசிக்கலாம். இதன் மூலம் குழந்தைகள் உரத்த குரலில் படிக்க முடியும், அவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்த முடியும்" என கூகுள் இந்தியா தயாரிப்பு நிறுவன மேலாளர் நிதின் காஷ்யப் கூறினார்.

அண்ட்ராய்டு 4.4 (கிட் கேட்) மற்றும் உயர்ந்த அனைத்து ஸ்மார்ட்போன்களில் உள்ள அனைத்து கூகுள் பிலே ஸ்டோரிலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியும்.

Google launches ‘Bolo’ to tutor children to read Hindi, English

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.