Skip to main content

குழந்தை விற்பனை: ராசிபுரம் பகுதியில் பிறப்புச் சான்றிதழ்கள் ஆய்வு

குழந்தைகள் கடத்தல் விவகாரம்:

ராசிபுரம் மற்றும் கொல்லிமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளாக பிறந்த குழந்தைகளை முறைகேடாக விற்பனை செய்து வந்த ராசிபுரம் செவிலியர் அமுதாவின் ஆடியோ ஒன்று வெளியானது.

இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அமுதாவிடம் விசாரணை நடத்தினார்கள்.

amutha

அப்போது குற்றத்தை அமுதா ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதற்கு துணை புரிந்த அவரது கணவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆண் குழந்தைக்கு 4 லட்சம் ரூபாயும், பெண் குழந்தைக்கு 3 லட்சம் ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிறப்பு சான்றிதழுக்கு 70 ஆயிரம் ரூபாய் நிர்ணயித்துள்ளனர். 

இதை அடுத்து, ராசிபுரம் கொல்லிமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணி துவங்கியுள்ளது.

Retired nurse quizzed for "child trafficking" in Namakkal: Birth Certificate Verification started.

முறைகேடாக விற்பனை

 

Tamil

Add new comment

Restricted HTML

  • Allowed HTML tags: <a href hreflang> <em> <strong> <cite> <blockquote cite> <code> <ul type> <ol start type> <li> <dl> <dt> <dd> <h2 id> <h3 id> <h4 id> <h5 id> <h6 id>
  • Lines and paragraphs break automatically.
  • Web page addresses and email addresses turn into links automatically.